ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ’குட் பேட் அக்லி’ ஆகும். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட படத்தின் ரீசர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அடுத்தடுத்த புதிய அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.