பனாமா கால்வாயை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வழிவகைகள் குறித்து அமெரிக்க இராணுவத்திடம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையிலான சமவெளியின் மிக குறுகிய பகுதியில் அமைந்துள்ள இவ் பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார்.
பனாமா கால்வாயை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து அமெரிக்காவிற்கு எதிராக செயற்படக்கூடும் என தெரிவித்துவரும் டிரம்ப் , அமெரிக்கா பனாமா கால்வாயை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என கூறிவருகின்றார்.