5.7 C
Cañada
March 15, 2025
ஐரோப்பா

வைரஸ் தொற்று தொடர்பில் பிரித்தானியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஐரோப்பாவில் வேகமாக பரவக்கூடிய வைரஸ் தொற்று குறித்து பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. மண்ணன், தட்டம்மை அல்லது மணல்வாரி (measles) என்னும் இவ் வைரஸ் தொற்றானது ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பும் Unicef அமைப்பும், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 2024ஆம் ஆண்டில் மட்டும் 127,350 பேருக்கு தட்டம்மை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

காற்றுன் மூலம் பரவும் இந்த தட்டம்மை வைரஸ், நுரையீரலை பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் வடிதல் இவற்றுடன் உடலில் சிவப்புப் புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் ஏற்படுவது இந்த நோயின் அறிகுறியாகும்.

மேலும் பிரித்தானியாவில் இவ் தட்டம்மைத் தொற்றைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் சிறந்த வழி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Related posts

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு அபராதம் வழங்க கூகுள் சம்மதம்

admin

உக்ரேன் போர்; ஐரோப்பிய தலைவர்கள் அவசர உச்சி மாநாடு

admin

பிரித்தானியாவில் கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள்

admin

Leave a Comment