5.7 C
Cañada
March 15, 2025
உலகம்

அமெரிக்க பணயக் கைதியை விடுவிப்பதற்கான ட்ரம்பின் கோரிக்கைக்கு ஹமாஸ் ஒப்புதல்

அமெரிக்க பணயக் கைதியை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அத்துடன் இஸ்ரேலிய பணயக் கைதிகளில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை ஒப்படைக்கவும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில் இருந்து பெப்ரவரி மாதம் வரை ஏழு வாரங்கள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கட்டாரில் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Related posts

அமெரிக்கா மற்றும் கனடா வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு

admin

அமெரிக்காவின் கட்டளைக்கு செவி சாய்க்க மறுத்த ஈரான்

admin

அணுசக்தி ஒப்பந்தம் குறித்த டிரம்ப் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்-அயதுல்லா அலி

admin

Leave a Comment