அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறுக்கப்பட்டுள்ளது.
178 பயணிகள் பயணித்த இவ் விமானம் தரையிறங்கியதும், சிறிது நேரத்தில் விமான இயந்திரத்தில் இருந்து தீ பிடித்துள்ளது.
விமானம் பறந்து கொண்டிருக்கும் போது இயந்திரத்தில் அசாதாரண அதிர்வுகள் ஏற்பட்டதால் உடனடியாக பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் மாலை 5.15 மணிக்கு தரையிறக்கப்பட்டது.
அனைத்து 178 பயணிகளும், விமான குழுவினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சிறிய காயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.