3.5 C
Cañada
March 16, 2025
உலகம்

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ISIS தலைவர் அபு கதீஜா பலி

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு கதீஜா என்று  அழைக்கப்படும் அப்துல்லா மக்கிமுஸ்லிஹ் அல்-ரிஃபாய், அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலை அமெரிக்கா மற்றும் ஈராக் உளவுத்துறை இணைந்து நடத்திய நிலையில், ஈராக்கின் அல் கான் மாகாணத்தில் ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை அமெரிக்காவும் ஈராக்கும் உறுதிப்படுத்தியுள்ளன.

உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாத நபர்களின் பட்டியலில் ஒருவராக அபு கதீஜா உள்ளார். இந்தத் தாக்குதலில் மற்றொரு சக்திவாய்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்

admin

அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தயாராக இருப்பதாக சீனா தெரிவிப்பு

admin

அமெரிக்காவில் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல்

admin

Leave a Comment