7.4 C
Cañada
March 18, 2025
இலங்கை

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த மாதத்திலிருந்து நடைமுறையில்

வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10 ஆம் திகதி சம்பளம் வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை 24250 ரூபாயிலிருந்து 40000 ரூபாவாக 15750 ரூபாயால் அதிகரிக்கவும் தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் இணைக்கவும் வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைப்பொருள் பழக்கம்

admin

காலி – அக்மீமன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

admin

ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுகிறதா?

admin

Leave a Comment