3.5 C
Cañada
March 16, 2025
சினிமா

டிராகன் படம் எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது: கயாடு லோஹர்

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் பல்லவி என்ற ரோலில் நடித்து இருந்தவர் கயாடு லோஹர். இதன் மூலம் சென்சேஷன் நடிகையாக மாறி இருக்கும் இவர் தற்போது டிராகன் படம் தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது என கூறி இருக்கிறார்.

அஸ்வத் மாரிமுத்து எனக்கு முதலில் கதை சொல்லும்போது கீர்த்தி ரோலுக்காக கூறினார். அதில் நடிக்க அதிகம் ஆவலுடன் இருந்ததாகவு, ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து அழைப்பு வரததால் படம் தன் கையை விட்டு போய்விட்டது என நினைத்ததாகவும் கூறினார்.

ஆனால் ஒரு மாதம் கழித்து அவர் என்னை மீண்டும் அணுகி பல்லவி ரோல் பற்றி கூறினார். இது இரண்டு ஹீரோயின் கதை என யோசிக்கவேண்டாம், மக்களுக்கு உன்னை பிடிக்கும் வகையில் தான் காட்டுவேன் என கூறினார். அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

கொடுத்த வாக்கை காப்பாற்றியதற்கும், சிறந்த ஒரு அறிமுக படத்தை கொடுத்தமைக்காகவும் நன்றி அஸ்வத் மாரிமுத்துக்கு நன்றி தெரிவித்தார். மேலும் உங்கள் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கிறேன் என கயாடு லோகர் தெரிவித்து இருக்கிறார். 

Related posts

ஏப்ரல் 9 ஆம் திகதி தனுஷ் – நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணை

admin

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்காததன் காரணம் – ஆர்.ஜே. பாலாஜி

admin

மீண்டும் காதலில் விழுந்த சமந்தா

admin

Leave a Comment