கொழும்பு – கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இன்று (15) அதிகாலையில் 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கூர்மையான ஆயுதத் தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
கொலையைச் செய்த சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.