3.5 C
Cañada
March 15, 2025
இந்தியா

தமிழ்நாடு இந்தி மொழியை புறக்கணிப்பது ஏன்? தமிழ்நாட்டை தாக்கிய பவன் கல்யாண்

படத்தை இந்தியில் டப் செய்துவிட்டு இந்திமொழியை எதிர்ப்பது ஏன் என்று தமிழ்நாட்டை தாக்கி பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.

வட மாநிலங்களான உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட், இமாச்சால பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்களில் மும்மொழிக்கொள்கை அமலில் உள்ளது. அவற்றில் ஆங்கிலமும், இந்தியும் கட்டாயப் பாடங்களாக உள்ளன.

தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசுகையில், “இந்தியாவுக்கு தமிழ் உள்பட பல மொழிகள் தேவையாக உள்ளது. இரு மொழிகள் மட்டுமே போதாது. நமது நாட்டின் மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் பேணுவதற்கு பன்முக தன்மை அடிப்படையில் பல மொழிகளை ஏற்க வேண்டும். தமிழ்நாடு அரசியல்வாதிகள் பணத்துக்காக தங்களுடைய திரைப்படங்களை இந்தியில் டப் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? என்று தான் புரியவில்லை. எனக் கூறியுள்ளார்.

மேலும் பாலிவுட்டில் இருந்து பணம் மட்டும் வேண்டும் என்கிறார்கள். ஆனால், இந்தியை மட்டும் புறக்கணிக்கிறார்கள். இது எந்த மாதிரியான லாஜிக் என்று புரியவில்லை” என்றார்.  

Related posts

டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா

admin

மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50,000 FD வழங்கப்படும்

admin

எட்டு வயது மகளுடன் 23ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய்

admin

Leave a Comment