கன்னட நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கடந்த 3-ந்தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் மீட்டு எடுக்கப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவலின்பேரில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டார்.
அவரை காவலில் வைத்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். வரது காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நேற்று காலையில் பெங்களூரு பொருளாதார சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
தருண் ராஜு இனை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முன்வராததால், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.