10.2 C
Cañada
March 15, 2025
உலகம்

41 நாடுகளிற்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் டொனால்டு டிரம்ப் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பெலாரஸ், பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, முதல் குழுவில் உள்ள நாட்டினரின் விசாவை முழுமையாக ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழு பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையை எதிர்கொள்கிறது. மூன்றாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதன்படி முதல் குழுவில், ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகளும், இரண்டாவது குழுவில் எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் உள்ளடக்கபடும். அத்தோடு மூன்றாவது குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தான் உள்ளிட்டவை தங்கள் குறைபாடுகளை சரி செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

Related posts

அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க் மற்றும் ரூபியோ இடையே கடும் வாக்குவாதம்

admin

டிக் டொக் இனை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையேயான போட்டி

admin

அமெரிக்கா மற்றும் கனடா வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு

admin

Leave a Comment