தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.
விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி தான். பின் இவர் உடல் நிலை காரணமாக விலகி இருந்தார்.
மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே சமீபத்தில் சில கருத்து வேறுபாடுகள் பேசு பொருளாக இருந்தது. இந்நிலையில், திவ்யதர்ஷினி பிரியங்கா குறித்து “எனக்கு பிரியங்காவை பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது. எந்த இடத்திலும் இறங்கி அடித்து வேலை செய்யும் நபர் பிரியங்கா. பொதுவாக நாம் அடுத்தவர்களுக்கு வழி விடுவது தப்பு ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.