7.4 C
Cañada
March 16, 2025
உலகம்

ஹிஜாப் அணியாத பெண்களை கண்காணிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தும் ஈரான் அரசு

ஈரானில் பெண்கள் தலையை மறைத்து ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சட்டம் உள்ளது. இதனை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டுப்பிடிக்க ஈரான் அரசு ட்ரோன் கேமராக்களை பயன்படுத்திக்கிறது.

உடைக்கட்டுப்பாட்டை மீறும் பெண்கள் குறித்து புகாரளிக்க Nazer எனும் அப்பினை ஈரான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாகனங்களில் செல்லும் பெண்கள் உடைக்கட்டுப்பாட்டை மீறினால், அந்த வாகன எண், இடம், நேரத்துடன் பொதுமக்கள் புகார் அளிக்க முடியும். அதன் பின் அந்த தகவல் காவல்துறைக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் தானியங்கி முறையில், வாகன உரிமையாளருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும். விதிமீறல் தொடர்ந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

அமீர்கபீர் பல்கலைக்கழகத்தில், ஹிஜாப் அணியாதவர்களைக் கண்டறிய அதிகாரிகள் முக அங்கீகார கேமராக்கள் மற்றும் மென்பொருளை நிறுவியுள்ளனர். மேலும், ஈரானின் முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் இதற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.    

 

Related posts

பணயக்கைதி விடுவிப்பில் இஸ்ரேலின் கோபத்தை மீண்டும் தூண்டிய ஹமாஸ்

admin

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற மார்க் கார்னி

admin

டிக் டொக் இனை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையேயான போட்டி

admin

Leave a Comment