7.4 C
Cañada
March 17, 2025
உலகம்

வடக்கு மாசிடோனியாவில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 60 பேர் பலி

வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை 02:30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், 155க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

அவ் விடுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் சுமார் 1,500 பேர் கலந்து கொண்டுள்ள நிலையில் ஏற்பட்ட இவ்விபத்தினால் பாரிய உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

மேலும் இவ் தீ விபத்தானது எரியக்கூடிய பொருட்களால் ஆன கூரையைத் தாக்கிய வாணவேடிக்கை சாதனங்களிலிருந்து வந்த தீப்பொறிகளால் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இவ் விபத்தில் உயிரிழந்தவர்களில் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்நாட்டு அரசாங்கம் ஏழு நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளதுடன் அனைத்து இரவு விடுதிகள் மற்றும் பெரிய கூட்டங்களை நடத்தும் உணவகங்களில் அவசர ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

Related posts

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற மார்க் கார்னி

admin

41 நாடுகளிற்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா

admin

டிக் டொக் இனை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையேயான போட்டி

admin

Leave a Comment