6.9 C
Cañada
March 18, 2025
கனடா

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் முரண்பாடுகள்

கடந்த 3ம் திகதி அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் வீசா பெற்றக்கொள்ள முயன்ற போது கனடிய தொழிலதிபர் ஜாஸ்மின் மூனி கைது செய்யப்பட்டார். கடந்த 12 நாட்கள் அமெரிக்க பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் வான்கூவாருக்கு திரும்பியுள்ளார்.

இன்னும் முழுமையாக எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை எனவும், தம்மை ஏன் கைது செய்தார்கள் என்பதற்கான தகவல்களை எந்த அதிகாரிகளும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக இருந்ததனால் தான் இப்போது வீட்டிற்கு வந்துள்ளேன் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவை தனதாக்கி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ள நிலையில், மூனியின் சம்பவம் கனடியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Related posts

கனடாவில் வளர்ப்பு நாய் கடித்ததில் புதிதாக பிறந்த குழந்தை உயிரிழப்பு

admin

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஆறு கட்டிடங்கள் முழுவதுமாக தீக்கிரையானது

admin

டொரொண்டோவில் பாரிய தீ விபத்து: 12 பேர் காயம்

admin

Leave a Comment