அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 34 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சூறாவளி மற்றும் புயல் தாக்கி வருகிறது. இதன் காரணமாகப் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிசவுரி பகுதி இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது. பல மாகாணங்களில் பாடசாலைகள் முற்றிலும் சேதமடைந்தன. சாலைகளில் கார்கள், லொறிகள் உள்ளிட்ட வாகனங்கள் தலைகீழாக கவிழ்ந்த நிலையில், பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் சுமார் 2 லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல வீடுகள் சேதமடைந்த நிலையில், அர்கான்சாஸ் மாகாணத்தில் 3 பேர் பலியாகினர். அதேபோல் டெக்ஸாஸ் மாகாணத்தில் புழுதிப் புயலின்போது ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.