ஏமனின் ஹவுதி படைகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார். இத் தாக்குதலில் சனிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் இதுவரை 31 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 101 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் ஹவுதிகளின் முக்கிய ஆதரவாளரான ஈரானை, அந்தக் குழுவிற்கான ஆதரவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஹவுதிகளுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள இந்த தாக்குதலானது சில வாரங்கள் நீடிக்கலாம் என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஏமனின் தென்மேற்கு நகரமான தைஸில் உள்ள ஹவுதி இராணுவ தளங்களையும் அமெரிக்கா குறிவைத்துள்ளது.