சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் நாசா அமைப்பும் இணைந்து விண்கலம் ஒன்றை அனுப்பியிருந்தது.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கிளம்பிய நாசாவின் புதிய விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று அடைந்தது. விண்கலத்தில் சென்ற புதிய குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த பின் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை சந்தித்தனர்.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் உட்பட 7 பேர் உள்ளனர். அத்தோடு வானிலை நன்றாக இருக்கும்பட்சத்தில் விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் 19ஆம் திகதி பூமிக்கு திரும்பலாம் என தெரிவித்துள்ளது.