இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் 36 வயது நபர் தனது 3 பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் குக்ரா பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்த்து வரும் சனூல் அன்சாரி (36) என்பவர் தனது மூன்று பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின் அவர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அயல் வீட்டினர் சந்தேகமடைந்து வீட்டை பார்த்த போது இது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்ற சமயத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.