கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
பொலிஸார் தேடலை ஆரம்பிக்க முன், ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரால் செவ்வந்தி மாலைத்தீவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் செயல்முறைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.