கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் 3 ஆம் திகதி துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் கடத்தியதாக டிஆர்ஐ அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்நிலையில் ரன்யா ராவ், டிஆர்ஐயின் கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு (ஏடிஜிக்கு) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த வழக்கில் நான் நிரபராதி என்று சொல்ல உங்கள் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை. காவலில் எடுக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை 10 முதல் 15 முறை தன்னை அதிகாரிகள் அறைந்ததார்கள். ஏற்கனவே எழுதப்பட்ட 50 முதல் 60 பக்கங்களிலும், சுமார் 40 வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன். திரும்பத் திரும்ப அடித்து, அறைந்த போதிலும், அவர்கள் தயாரித்த அறிக்கையில் கையெழுத்திட நான் மறுத்துவிட்டேன். காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை. எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளனர். உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரன்யா ராவ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.