9.1 C
Cañada
March 17, 2025
கனடா

மிசிசாகா நகரிலுள்ள அமெரிக்க தேசிய கொடிகளை அகற்ற நடவடிக்கை

கனடாவின் மிசிசாகா நகரம் பல பொது இடங்களில் காணப்பட்ட அமெரிக்க தேசிய கொடிகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது பலரின் கோரிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டதாக நகர மேயர் கேரோலின் பாரிஷ் தெரிவித்தார்.

விளையாட்டு அரங்குகள், ஓன்டாரியோ ஏரிக்கு அண்மித்த இடங்கள் மற்றும் Port Credit பகுதியில் உள்ள Snug Harbour பியர் ஆகிய இடங்களிலுள்ள அமெரிக்க கொடிகள் அகற்றப்பட்டதாக மேயர் பாரிஷ் X தளத்தில் தெரிவித்துள்ளார். அத்தோடு  பெரிய கனேடிய கொடிகள் நகர மன்றம் கொடி தூண்களில் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவுக்கு எதிராக கடுமையான வரிகளை விதித்து வரும் நிலையில் இவ் வர்த்தக போரின் பின்னணியில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழர்

admin

அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா ஒருபோதும் இருக்கப் போவதில்லை

admin

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற மார்க் கார்னி

admin

Leave a Comment