மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் அமைந்துள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அவுரங்கசீப்பின் கல்லறை அகற்றப்படாவிடின் பாபர் மசூதியைப் போல் கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பஜ்ரங் தளம் மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஔரங்கசீப் கல்லறையைச் சுற்றி 24 மணி நேர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு மகாராஷ்டிராவின் புனேவில், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தியுள்ளன.
இதற்கிடையில் ஆளும் பாஜக கூட்டணி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க தீவிரம் காட்டி வருவதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.