இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறுகின்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.
இப் போட்டியில் பெலாரசைச் சேர்ந்தவரும், நம்பர் 1 வீராங்கனையுமான அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
இதன் போது சபலென்கா முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். தொடர்ந்து மிர்ரா ஆண்ட்ரீவா அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிக்கொண்டார். மேலும் சமீபத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரிலும் மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.