கடந்த 9 மாதங்களாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் கொண்டிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (18) பூமிக்குத் திரும்பவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரின் ஆண்டு வருமானம் 1.08 கோடி ரூபாயிலிருந்து 1.41 கோடி ரூபாய் வரை இருக்கலாமென கூறப்படுகின்றது.
நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க அரசின் பொது அட்டவணையில் மிக அதிக ஊதியம் பெறும் ’ஜிஎஸ்-15’ தரப் பணியாளர் ஆவார். ஜிஎஸ்-15 தரப் பணியாளர்களின் ஆண்டு ஊதியமானது, 125,133 அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 162,672 டொலர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.