தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக, தெற்கு எல்லையில் அமெரிக்கா ஒரு கடற்படை கப்பலை நிறுத்தியுள்ளது. டசன் கணக்கான டோமாஹாக் கப்பல் ஏவுகணைகளை சுமந்து செல்லும் destroyer USS Gravely என்ற கப்பலையே அமெரிக்க கடற்படை தெற்கு எல்லையில் நிறுத்தியுள்ளது.
பனாமா கால்வாயை கைப்பற்றுவேன் என ட்ரம்ப் கூறி வருவதுடன், செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்த்து அமெரிக்க படைகள் போராடி வருகின்றன. இக் கப்பலானது மத்திய கிழக்கில் ஹவுதி படைக்கு எதிரான போராட்டத்தில் 9 மாதங்கள் இருந்தது.
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த கப்பல் ட்ரம்ப்பின் உத்தரவின்படி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க கடலோர காவல்படையால் வழக்கமாக ரோந்து செய்யப்படும் நீரில் நிறுத்தப்படும் என்றும், இது சர்வதேச நீர்நிலைகளிலும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.