6.9 C
Cañada
March 18, 2025
இந்தியா

படிக்கவில்லை என்பதற்காக குழந்தைகளைக் கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) ஊழியராக இருந்த சந்திர கிஷோர் (வயது 37) தனது ஏழு மற்றும் ஆறு வயதுடைய மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி இரவு 10 மணியளவில் அவர்களை தண்ணீர் நிறைந்த வாளியில் மூழ்கடித்து கொன்ற பின்னர் அவர் படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற அவரது மனைவி அறைக்கதவை திறந்தபோது, கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் மயக்கமடைந்த நிலையிலும் இருப்பதைக் கண்டார்.

சந்திர கிஷோர் தனது மகன்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றால், எதிர்காலத்தில் அவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என பயந்ததாகவும், இவ் மன அழுத்தத்தால், அவர் இறுதியில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.  

Related posts

மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50,000 FD வழங்கப்படும்

admin

மூன்று பிள்ளைகளை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தந்தை

admin

இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

admin

Leave a Comment