நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற விவாத தொடக்கத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது, பிமல் ரத்நாயக்க இந்த கோரிக்கையை முன்வைத்தார். சமீபத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை கோரப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஸ்வஸ்திகா அருள்லிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு, குறித்த விவகாரத்தை விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.