9.1 C
Cañada
March 19, 2025
உலகம்

சோவியத் கால எண்ணெய் குழாயை மீண்டும் பயன்படுத்த திட்டம்

சோவியத் கால எண்ணெய் குழாய் வழியாக ரஷ்ய எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுவருகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி ஆகிய நாடுகள், ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிசக்தி விநியோகத்தை மீண்டும் தொடங்க ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

சோவியத் யுகத்தில் உருவாக்கப்பட்ட ட்ரூஸ்பா (Druzhba) எண்ணெய் குழாய் வழியாக எரிசக்தி வழங்குவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

சோவியத் யுகத்தில் உருவாக்கப்பட்ட ட்ரூஸ்பா குழாய் உக்ரைன் வழியாக செல்லும் முக்கிய பாதையாக இருந்தது. 2022 வரை, இது பல ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகித்தது.

ஜேர்மனி 2022ல் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்தியது. ஆனால், ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் இன்னும் ட்ரூஸ்பா வழியாக எண்ணெய் பெற்றுவருகின்றன.

இந்த பேச்சுவார்த்தைகள், ரஷ்யா-அமெரிக்கா இடையேயான மிகப் பாரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதே சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கணித்துள்ளன.

Related posts

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ISIS தலைவர் அபு கதீஜா பலி

admin

சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரிப்பு

admin

இந்திய மாணவி அமெரிக்காவினை விட்டு வெளியேற்றம்

admin

Leave a Comment