இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் காசா, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தாலும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் தாக்குதல் நடத்த உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக காசாவுக்கு உணவு, மருத்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் செல்லும் வழிகள் இஸ்ரேலினால் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளன. மேலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 200 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதார துறை தகவல் வழங்கியுள்ளது.