இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்வடைந்துள்ளது. இன்றைய அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.60 ரூபாயாகவும், கொள்வனவு விலை 292.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
மற்ற வெளிநாட்டு நாணயங்களிலும் மாற்றம் காணப்படுகிறது. கனேடிய டொலரின் விற்பனை விலை 211.42 ரூபாய், கொள்வனவு விலை 202.77 ரூபாயாக உள்ளது. யூரோவின் விற்பனை விலை 329.68 ரூபாயாகவும், கொள்வனவு விலை 316.78 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேர்லிங் பவுண்டு மற்றும் அவுஸ்திரேலிய டொலர் விகிதங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்டேர்லிங் பவுண்டின் விற்பனை விலை 391.53 ரூபாய், கொள்வனவு விலை 377.30 ரூபாயாக உள்ளது. அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை விலை 193.59 ரூபாயாகவும், கொள்வனவு விலை 184.37 ரூபாயாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.