அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு உதவிகளை இடைநிறுத்தியமையானது பல்வேறு நாடுகளை பாதிக்கக்கூடும் என்றும், குறிப்பாக எச்.ஐ.வி சிகிச்சை வழங்குவதில் சிக்கல்கள் உருவாகும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஹைட்டி, கென்யா, தெற்கு சூடான், மாலி, நைஜீரியா மற்றும் யுக்ரேன் உள்ளிட்ட எட்டு நாடுகள் இவ்வாறு பாதிக்கப்படும் எனவும், குறித்த நாடுகளில் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் தீர்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி தொற்றால் ஏற்படும் பாதிப்பினால் எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கான சுகாதார முன்னேற்றம் தடையடையக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் பெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். இந்த முடிவால் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம், மேலும் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி தொற்றினால் உயிரிழக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உதவி நிறுத்தம் எச்.ஐ.வி மட்டுமல்லாமல், போலியோ, மலேரியா, மற்றும் காசநோய் போன்ற நோய்களினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனால், மருத்துவ உதவிகளுக்கு நம்பிக்கையாய் இருந்த நாடுகளில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி உருவாகலாம்.