பிரான்ஸ் அரசியல்வாதி ரஃபேல் க்லக்ஸ்மேன், அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை திருப்பிக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 1884 ஆம் ஆண்டு, அமெரிக்க விடுதலை தினத்தையொட்டி, பிரான்ஸ் Statue of Liberty சிலையை அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கியது. இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் விவகாரம் மற்றும் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள் காரணமாக, அமெரிக்கா அடக்குமுறை நாட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக ரஃபேல் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஃபேல், அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகளை விமர்சித்து, அறிவியல் சுதந்திரம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதனால், அமெரிக்கா சுதந்திரத்தின் அடையாளமாக விளங்கும் சுதந்திர தேவி சிலையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கோரிக்கைக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் கடுமையாக பதிலளித்துள்ளார். அவர், அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் பிரான்சுக்கு உதவவில்லையென்றால், இன்று அவர்கள் ஜெர்மன் மொழியே பேசிக்கொண்டு இருப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும், பிரான்ஸ் அமெரிக்காவிடம் நன்றி செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.