9.1 C
Cañada
March 19, 2025
உலகம்

பிரித்தானியாவின் மிக விலையுயர்ந்த வீதியிலுள்ள ஒரு வீட்டின் விலை ரூ.500 கோடி

பிரித்தானியாவின் 2025 ஆம் ஆண்டின் மிக விலையுயர்ந்த வீதி லண்டன் ஹாம்ஸ்டெடில் உள்ள வின்னிங்டன் ரோடு (Winnington Road) ஆகும். இந்த தெருவில் ஒரு வீட்டின் சராசரி விலை 11.9 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.460 கோடி) எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது Billionaires’ Row என அழைக்கப்படும் The Bishops Avenue அருகிலுள்ள செல்வந்தர்கள் வசிக்கும் பிரபலமான பகுதி.

இந்த தெருவில் உள்ள வீடுகள் பெரும்பாலும் நிரந்தர குடியிருப்புகளாக இருக்கின்றன. இங்கு தற்போது கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த மாளிகை 24.95 மில்லியன் பவுண்டு மதிப்புடையதாக உள்ளது, இதில் நான்கு மாடிகள், 17,000 சதுர அடி பரப்பு, நீச்சல் குளம், ஜிம், மற்றும் ஆறு கார்கள் நிறுத்தக்கூடிய இடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

2025-ம் ஆண்டின் பிரித்தானியாவின் 20 விலையுயர்ந்த தெருக்களில் 18 லண்டனிலேயே அமைந்துள்ளன. இதன்மூலம், லண்டன் ப்ரீமியம் ரியல் எஸ்டேட் சந்தையில் தன் உயர்ந்த மதிப்பை நிலைநிறுத்தி வருகிறது. Lowndes Square, Eaton Terrace, மற்றும் Cadogan Place போன்ற இடங்களும் அதிக விலையுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related posts

அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

admin

காசாவிற்கான மின் விநியோகம் தடை – இஸ்ரேல் தீர்மானம்

admin

14,000 மேனேஜர்களை இந்தாண்டு பணிநீக்கம் செய்யவுள்ள அமேசான் நிறுவனம்

admin

Leave a Comment