சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், அதற்கு முதலுதவி வசதிகள் இல்லாததே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சுற்றுலா சங்கத்தின் செயலாளர் பி. விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், முறையான முதலுதவி வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வழிகாட்டிகள் உள்பட மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். சிகிரியா பார்வைக்கு 11,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படினும், தேவையான முதலுதவி வசதிகள் அங்கு இல்லை என அவர் கண்டனம் தெரிவித்தார்.
சுற்றுலா தலங்களில் முதலுதவி வசதிகளை ஏற்படுத்துதல் முக்கியமானது என்பதை சுற்றுலாத் துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.