அமேசான் நிறுவனம் ஆண்டுதோறும் 2.1 முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கில், இந்த ஆண்டு 14,000 மேலாளர் பதவிகளை நீக்க திட்டமிட்டுள்ளது. இது அதன் உலகளாவிய மேலாளர் பணியிடங்களில் 13% ஆகும். இதன் மூலம் நிர்வாகப் பணியாளர்களின் எண்ணிக்கை 1,05,770 இலிருந்து 91,936 ஆக குறைகிறது.
இந்த வேலை குறைப்பால் அமேசான் வலை சேவைகள் (AWS), சில்லறை விற்பனை மற்றும் மனித வளங்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் பாதிக்கப்பட உள்ளன. பெரும் வளர்ச்சி கண்ட கொரோனா காலத்தில், அமேசான் அதிகமான ஊழியர்களை நியமித்தது.
2019 ஆம் ஆண்டில் 7,98,000 பேர் வேலை பார்த்த அமேசானில், 2021 இறுதியில் இந்த எண்ணிக்கை 16 லட்சமாக உயர்ந்தது. ஆனால் அதன் பிறகு, பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர், இதன் தொடர்ச்சியாக மேலாளர் பணியிடங்களும் குறைக்கப்படவுள்ளன.