11.9 C
Cañada
March 19, 2025
விளையாட்டு

804 என்ற இலக்கமிட்ட தொப்பியினை அணிந்ததால் அமீர் ஜமாலுக்கு 1.4 மில்லியன் அபராதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் ‘804’ என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் சுமார் 1.4 மில்லியன் அபராதம் விதித்திருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, இந்த 804 என்ற எண்ணானது, சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானின் கைதி நம்பரைக் குறிக்கிறது.

கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவந்து இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Related posts

டைம் அவுட்டில் ஆட்டமிழந்த முதல் பாகிஸ்தான் வீரர்

admin

கிரிக்கெட் ஜாம்பவான்கள் மோதும் மாஸ்டர் லீக் போட்டி இன்று – சங்கா VS டெண்டுல்கர்

admin

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜாக் டிராபர்

admin

Leave a Comment