10.7 C
Cañada
March 20, 2025
உலகம்

ஏலத்திற்கு விடப்படவுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் நீலநிற பறவை

டுவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 12 அடி உயரமும் 8 அடி அகலமும் 250 கிலோ எடையும் கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார்.

இதனிடையே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட டுவிட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினையை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஏலம் வென்றவர்கள் இலச்சினையை எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் 20ஆம் தேதி வரை ஏலம் தொடரும், அதன் பிறகு அதிக விலையை கோரியவர்களுக்கு இந்த இலச்சினை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

டெஸ்லா வாகனம் மீது சுவஸ்திகா முத்திரை வரைந்த நபர்; கண்டனம் தெரிவித்த மஸ்க்

admin

டிக் டொக் இனை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையேயான போட்டி

admin

ராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா: உக்ரைனுக்கு உதவ முன்வந்த பிரான்ஸ்

admin

Leave a Comment