கனடியர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கும் போது இனி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குடியேற்ற சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, தொழிலின் அடிப்படையில் அமெரிக்கா சென்று வேலை வாய்ப்புகளை நாடும் கனடியர்களுக்கான இச்சரிக்கை முக்கியமாக வெளிப்பட்டுள்ளது.
வாங்கூவரில் வாழும் ஜாஸ்மின் மூனி, அமெரிக்க எல்லையில் விசா மறுக்கப்பட்டு, 12 நாட்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டார். கடந்த 10 நாட்களில் அமெரிக்க எல்லையில் பல்வேறு குடியேற்ற நிலைகளுடன் கூடிய நபர்கள், நிரந்தர குடியுரிமை (PR) கார்டு வைத்திருந்த ஒருவரும் காவலில் வைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க குடியேற்ற சட்ட வல்லுநர் ஜிம் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) கடந்த ஜனவரி மாதம், ஜாஸ்மின் மூனியை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆணைக்கேற்பக் கைது செய்ததாக அறிவித்தது. இதன்மூலம், எல்லையை கடப்பது இனி சாதாரண காரியம் அல்ல என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், விசா முடிவுகள் எல்லை அதிகாரிகளின் தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மாறுபடலாம் என்றும், எனவே கனடியர்கள் எல்லை கடப்பதை எளிதாக கருதக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் கூடுதலாக கடுமையான நடவடிக்கைகள் தொடர வாய்ப்பு உள்ளது என்று சில குடியேற்ற சட்ட வல்லுநர்கள் சுட்டி கூறியுள்ளனர்.