அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் (USAID) நிறுவனத்தை மூடும் நடவடிக்கைக்கு, எலான் மஸ்குக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மேரிலேண்ட் மாவட்ட நீதிபதி தியோடர் சுவாங், யு.எஸ்.எய்ட் நிறுவனத்தை மூடும் அதிபர் டிரம்பின் முடிவு அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறும் செயல் என்று தெரிவித்தார்.
நீதிபதி, யு.எஸ்.எய்ட் நிறுவன ஊழியர்களின் பணிகள் சர்வதேச அளவில் முக்கியமானவை என்றும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவு, இந்நிறுவனத்தின் பணிகளை தொடரவேண்டிய அவசியத்தை நியாயப்படுத்துகிறது.