புத்தளத்தில் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி, 21 வயது இளைஞன் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் வென்னப்புவ பகுதியில் உள்ள பள்ளி அருகிலுள்ள வீட்டில் நடைபெற்றுள்ளது.
கொல்லப்பட்ட 19 வயது விமல்கா துஷாரி, மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த இளைஞனுடன் ஒன்றரை வருடங்களாக காதல் உறவில் இருந்துள்ளார். ஆனால், உறவை முடிக்க விரும்பியதாக காதலி தெரிவித்ததால், ஆத்திரமடைந்த இளைஞன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
காதலுக்காக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞன் காதலியை கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.