தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் ஆல்யா மானசா. இவர் நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர்.
இவர் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து புகழ் பெற்றார். அதன் இரண்டாவது பாகத்தில் அவர் தன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து காட்சியளித்தார், ஆனால் அந்த நேரத்தில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால், தொடரில் இருந்து விலகினார்.
குழந்தை பெற்ற பிறகு சன் டிவியில் இனியா தொடரில் நடிக்க தொடங்கினார். அந்த தொடரும் முடிவடைந்த நிலையில் பல தனியார் நிகழ்ச்சிகள், போட்டோ ஷுட் என்பவற்றில் பங்குபற்றினார். இந் நிலையில் இவர் தற்போது சன் டிவிக்காக புதிய தொடரில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.