13 C
Cañada
March 20, 2025
சினிமா

முண்ணனி நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ள கயாடு லோஹர்

சமீபத்தில் வெளியான “டிராகன்” படமானது மாபெரும் வெற்றியடைந்து, தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் நடிகை கயாடு லோஹர், தமிழில் அதிக கவனத்தை பெற்றார். இவர் மலையாள சினிமாவில் அறிமுகமானவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் தனக்கு தனி ரசிகர்களைப் பெருக்கியுள்ளார்.

“டிராகன்” படத்தின் வெற்றியால், கயாடு லோஹருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு புதிய வாய்ப்பு தந்து, சிம்பு நடிப்பில் உருவாகி வரும் “STR 49” என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இதனால், கயாடு லோஹரின் எதிர்காலம் தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது, ஆனால் இதுவரை படக்குழுவின் சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்படவில்லை. மேலும், இப்படத்தில் சந்தானம் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக எப்போது வெளியிடப்படும் என்று பலர் எதிர்பார்த்து உள்ளனர்.

Related posts

ஏப்ரல் 9 ஆம் திகதி தனுஷ் – நயன்தாரா வழக்கின் இறுதி விசாரணை

admin

ரீரிலீஸ் ஆகவுள்ள விஜய்யின் ‘பகவதி’ திரைபடம்

admin

ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை குறித்து அவரது சகோதரி தெரிவித்த தகவல்

admin

Leave a Comment