நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்தனர். அவர்களின் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் 17 மணிநேர பயணம் செய்து புளோரிடா கடற்பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கினர். இவர்களுடன் நிக் ஹேக் மற்றும் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோர் இருந்தனர். விண்கலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்.
சுனிதா வில்லியம்ஸ், விண்வெளிக்கு செல்லும் போது, தன்னுடன் பகவத் கீதையும் சமோசாவையும் எடுத்துச் சென்றதாக கூறினார். பகவத் கீதையை தனது தந்தை பரிசளித்ததாகவும், இது தனது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், விநாயகர் சிலையையும் இவர் பயணத்தின் போது கொண்டுசென்றார் என கூறப்படுகிறது.