விண்வெளியில் 9 மாதங்கள் இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உள்ளிட்ட நான்கு வீரர்கள், இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பினர்.
இந்திய நேரப்படி 3:27 மணிக்கு புளோரிடா அருகே கடலில் பாதுகாப்பாக தரையிறங்கினர். நாசா அதிகாரிகள் அவர்களை மீட்டு படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் உற்சாகமாக கையசைத்தனர், ஆனால் அவர்களால் தற்போது நடக்க முடியவில்லை. அவர்கள் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
கண்கொள்ளா காட்சியாக, விண்கலம் கடலில் விழுந்தபோது, அதை சுற்றி டால்பின்கள் நீந்தி வரவேற்றது, இது கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.