9.1 C
Cañada
March 31, 2025
உலகம்

மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா என ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா என குறிப்பிட்டுள்ளார். வரலாற்று ரீதியாக நட்பு நாடுகளான கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கனடா மீது அமெரிக்கா வரிகளை விதித்ததன் மூலம் வர்த்தகப் போர் தொடங்கிய நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் வரிகளை விதித்தது. இதன் விளைவாக கனடியர்கள் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணித்தனர். இந்நிலையில், ட்ரம்ப் கூறியதாவது, “நாம் எல்லா நாடுகளுடனும் தொடர்பு கொள்வோம், ஆனால் சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா” என கூறியுள்ளார்.

அத்தோடு, கனடாவுக்கு ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர் மானியம் வழங்கி வருவதாகவும், இதனால் கனடா அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அவர், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை “கவர்னர் ட்ரூடோ” என்றும் குறிப்பிட்டு வந்தார், மேலும் கனடாவின் மரக்கட்டைகள், மின்சாரம் மற்றும் வாகனங்கள் அமெரிக்காவுக்குத் தேவையில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற மார்க் கார்னி, ட்ரம்புக்கு எதிராக துணிந்து செயல்படுவோம் என உறுதி அளித்துள்ளார்.

Related posts

மாஸ்கோவில் புடினின் கார் வெடிப்பு: புடினை கொல்ல நடந்த சதியா?

admin

நைஜர் மசூதி தாக்குதல்: 44 பேர் உயிரிழப்பு

admin

நாசாவின் அதிகாரிகள் திடீர் பணிநீக்கம்- டிரம்ப் உத்தரவு

admin

Leave a Comment