10.3 C
Cañada
March 23, 2025
இலங்கை

சாதாரண தரப் பரீட்சையின் போது நேரம் முடிவடைய முன்னராக விடைத்தாள்களை வாங்கியதால் குழப்பம்

தற்போது நாடளாவிய ரீதியில் சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 18.03.2025 அன்று மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியில் தமிழ் பாட பரீட்சை எழுதிய 150 மாணவர்களுக்கு பரீட்சை மண்டபத்தில் அநீதி ஏற்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய பகுதி பாட வினாத்தாளுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிவடைய ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் இருந்தும், விடைத்தாள்கள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. வினாத்தாள்களுக்கு ஒரு மணித்தியாலம் மற்றும் நாற்பது நிமிடங்கள் கால அவகாசம் இருந்திருந்தும், பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய மேற்பார்வையாளர்கள் விடைத்தாள்களை மாணவர்களிடமிருந்து வாங்கி, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, 150 மாணவர்கள் முழுமையாக பரீட்சை வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் தவறியுள்ளனர். இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். பரீட்சை பொதுவாக இரண்டு பரீட்சை மண்டபங்களில் நடைபெற்றிருந்தாலும், இந்த அநீதி ஒரு மண்டபத்தில் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள், இந்தத் தவறான செயல்முறை காரணமாக தங்களின் புள்ளிகள் மற்றும் பெறுபேறுகள் குறைவடையலாம் என்றும், தமிழ் மொழி பாடம் அவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என்றும், இந்த தவறிற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் மாணவர்களது பெற்றோரும் கோரியுள்ளனர்.

Related posts

போதிய முதலுதவி வசதி இல்லாமையால் சிகிரியாவில் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

admin

அர்ச்சுனா எம்பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை: பிமல் ரத்நாயக்க

admin

பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய சந்தேகநபர் வாக்குமூலம்

admin

Leave a Comment