ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீது குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு, விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவது தொடர்பாக ஜோ பைடன் நிர்வாகம் அரசியல் காரணங்களுக்காக அதனை நிராகரித்ததாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்தனர். அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பினார். இதைப் பற்றி எலான் மஸ்க் கூறும்போது, இந்த திட்டத்தில் பங்கேற்ற ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா குழுவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்துள்ள ட்ரம்ப்புக்கும் நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க், சில மாதங்களுக்கு முன்னரே ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வந்திருப்போன் எனக் கூறினார். ஆனால், இதற்கான கோரிக்கையை ஜோ பைடன் நிர்வாகம் சில அரசியல் காரணங்களுக்காக நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.