இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் நடந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த முஸ்கான் மற்றும் ரஜபுத், குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவதால் பிரிந்து தனியாக வசிக்கின்றனர்.
இந்நிலையில், முஸ்கான் சாஹில் என்பவருடன் தொடர்பு ஏற்ப்பட்டது. இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்றனர். ஆனால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு அம்முடிவை கைவிட்டுவிட்டு மீண்டும் கப்பலில் வேலைக்கு செல்ல ரஜபுத் முடிவு செய்தார்.
கடந்த 2023ம் ஆண்டுதான் ரஜபுத் கப்பலில் வேலைக்கு சென்றார். இந் நேரத்தில் முஸ்கான் தனது காதலனுடனான நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டதுடன், இருவரும் இணைந்து அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
முஸ்கான் 4-ம் தேதி கணவரின் சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து, ரஜபுத் தூங்கிய பின்னர் முஸ்கானும், சாஹிலும் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர். ரஜபுத் உடலை 15 துண்டுகளாக வெட்டி, டிரம் இல் போட்டு ஈரமான சிமெண்ட்டை போட்டு மறைத்துவிட்டனர். ரஜபுத் பெற்றோர் தங்கள் மகனை காணவில்லை என போலீசில் புகார் அளித்த பிறகு, இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
மீரட் பொலிஸ் அதிகாரிகள் ”கொலை செய்த பிறகு வெட்டப்பட்ட தலையுடன் உடலை இரவு முழுக்க பாத்ரூம்பில் போட்டு வைத்துள்ளனர். காலையில் 50 கிலோ சிமெண்டும், டிரம் ஒன்றும் சாஹில் வாங்கி வந்து, உடலை பல துண்டுகளாக வெட்டி டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்தனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரஜபுத் போனில் இருந்து அடிக்கடி அவரது குடும்பத்திற்கு முஸ்கான் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தார்.அத்தோடு கொலை செய்தபின், முஸ்கான் மற்றும் சாஹில் 12 நாட்களுக்கு சிம்லா சென்றனர். இந்த தகாத உறவின் விளைவாக, மனைவியே கணவரை கொன்றது அதிர்ச்சி மற்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.